காதலிக்காக நடந்த சண்டை..வேறு ஒருவருக்கு கத்திக்குத்து..!

துரையில் காதல் தகராறில் சமாதானம் செய்ய முயன்ற நபர் கத்திக்குத்தில் பலியானார். மதுரை தல்லாகுளம் பகுதியில் சேர்ந்த சரவணன் குமார். சசிகலா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

சசிகலா தனது முன்னாள் காதலன் ரஞ்சித் குமாருடன் தாபா ஹோட்டலில் உணவருந்தியதை அறிந்து அங்கு சென்ற சரவணன் குமார், ரஞ்சித்துடன் சண்டையிட்டதாக தெரிகிறது. தகராறு முற்றிய ரஞ்சித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணகுமாரை குத்தியதாக கூறப்படுகிறது.

 

 

இந்த சண்டையை தடுக்க வேண்டும் என சரவணகுமார் நண்பர் விஷ்வாவிற்கும் கத்தி குத்து விழுந்தது. இதில் இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே பலியானார். சரவண குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஞ்சித் குமார் மற்றும் அவரது நண்பரை கொலை செய்தது தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.