விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-ஆக உயர்வு..!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. விஷச்சாராயம் குடித்த 229 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சைக்கு பின் குணமடைந்து விடு திரும்பி உள்ளனர்.
கடந்த 1ம் தேதி வரை 65 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் தற்பொழுது 3 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் மேலும் 3 பேர் சேலம் அரசு மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்கு தொடர்பாக பரமசிவம் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





