வாக்குச்சாவடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்..வெறிச்செயல்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்ணை அவரின் கணவர் வாக்குச்சாவடியில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் விக்ரமாண்டியில் நடைபெற்று இடைத்தேர்தலில் கோசப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வாக்களிக்க வந்த கனிமொழி என்ற பெண்ணை அவரது கணவரான ஏழுமலை என்பவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தம்பதி இருவரும் கருத்து வேறுபாடல் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாக்குசாவடி மையத்திலிருந்து தப்பி ஓடிய ஏழுமலையை பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விசாரணையில் ஏற்கனவே இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஏழுமலை சிறைக்கு சென்று வெளியே வந்திருப்பது தெரிய வந்தது. இதனிடையே கனிமொழியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த உறவினர்கள் அங்கிருந்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.