--- --:--:-- --

அதிக இலாபம் தருவதாக கூறி மோசடி செய்த பெண்..!

9

புதுச்சேரியில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ரூ. 17.15 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் அறிவித்து வருகிறார்கள். புதுச்சேரி நைனார் மண்டபத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் இணையதளம் மூலமாக மணப்பெண் தேடிய பொழுது அடையாளம் தெரியாத பெண் செல்போனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

 

மேலும் இணையதளம் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறிய ஆசையை காட்டி உள்ளார். இதனை நம்பிய பாலாஜி பல தவணைகளில் ரூ.17.15 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார்.

 

இதேபோல் புதுச்சேரியில் கடந்த சில நாட்களில் மட்டும் 5 பேரில் 27 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon