மீண்டும் குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை..!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ள, நிலையில் புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மாதம் 1840.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது குறைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூ1,809.50-க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.கடந்த 4 மாதங்களில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 151 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து 4வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், ஓட்டல் உரிமையாளர்கள், வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




