விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்றுக : அன்புமணி
விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் விதிமீறல் நடப்பதால், தேர்தல் அதிகாரியை உடனே மாற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஜூலை 10ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், திமுகவினர் ஆயிரக்கணக்கான கார்களில் வலம்வருவதாக குற்றம்சாட்டிய அவர், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




