நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்ட மாணவர் பலி..!
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த யாதவ் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த பொழுது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர் உயிரிழந்ததை எடுத்து ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் நிலத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





