நாகராஜனின் நரித்தனம்.. திருப்பூரில் தானகிரயத்தில் நில உரிமையாளரின் மோசடி!!
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை திருமூர்த்தி நகர், தளி பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவருக்கு சொந்தமான சொத்துக்களை கடந்த 11.08.2008 தேதி அன்று கரூரை சேர்ந்த அருள் என்பவரிடம் சுவாதீன ஒப்படைப்பு செய்துள்ளார்.
இந்த நிலையில் போக்கிய ஒப்பந்தம் உடன்படிக்கைக்கு விரோதமாக நாகராஜன் மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் போக்கிய ஒப்பந்த உடன்படிக்கையின்படி, அருள் என்பவருக்கு 10- 12 -.2028 தேதி வரை சுவாதீனத்தில் உரிமை உள்ளது.
இந்த நிலையில் அருளின் ஒப்பந்தம் பத்திரம் முடிவடைய இன்னும் பல ஆண்டுகள் உள்ள நிலையில், நாகராஜனிடம் இருந்து கிரயம் வாங்கிய உடுமலைப்பேட்டையை சேர்ந்த பத்மநாபன் என்பவர் சொத்துக்களை அவரது சகோதரி உமாதேவி பெயரில் பத்திர பதிவு செய்துள்ளனர்.
அதேபோல மேலும் ஒரு பகுதி சொத்துக்களை விருதுநகரை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் கிரையம் பெற்றுள்ளதாகவும், கிரையம் வாங்கிய சொத்துக்களை, ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவக்கு கிரையம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on Xஇந்நிலையில் ஒப்பந்த கிரையம் பெற்ற அருள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாகராஜனிடமிருந்து கடந்த 11.08.2008 தேதி முதல் சுமார் 20 ஆண்டுகளுக்கு சாகுபடி ஒப்பந்த கிரயம் பெற்றேன். இன்னும் 4 ஆண்டுகள் ஒப்பந்த உரிமை உள்ள நிலையில், நாகராஜன் விதிகளுக்கு புறம்பாக மூன்று நபருக்கு கிரைய பத்திரம் வழங்கியுள்ளார் ,மேலும் அவர்கள் மூலம் எனக்கு பெரும் தொந்தரவு கொடுத்து வருகிறார்.
குறிப்பாக ,உமாதேவி கணவர் ஆறுச்சாமி என்பவர் பணபலம் மற்றும் தமிழக அரசின் உச்சகட்ட பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளும் அரசியல் முக்கிய புள்ளிகளும் தனது பின்புலத்தில் இருப்பதாக கூறி தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
எனது சுவாதீனத்தில் இருக்க கூடிய இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதோடு,மட்டுமல்லாமல் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர். கிரையம் வாங்கிய நபர்களுக்கு கலெக்டர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடா்பில் உள்ளதாகவும், மிரட்டல் விடுக்கின்றனர்.
ஒப்பந்த தேதி முடியும் வரை நான் அந்த இடத்தில் சாகுபடி செய்ய வேண்டும். இல்லையெனில் நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக கூறினாா்.





