--- --:--:-- --

பண ஆசை காட்டி பெண்ணிடம் மோசடி..!

7

புதுச்சேரியில் பண ஆசை காட்டி பெண்ணிடம் 11.87 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை காவலர்கள் தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்தையார் பாளையத்தைச் சேர்ந்தவர் லதா இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை முதலீட்டாளர் போல் அறிமுகம் செய்துள்ளார்.

 

மேலும் தான் சொல்லும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதை நம்பி லதா அவர் சொன்ன செயலியை பதிவிறக்கம் செய்து தவணை முறையாக 13.87 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார்.

 

பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து புதுச்சேரியில் உள்ள இணையதள குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon