--- --:--:-- --

அதிமுக போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு..!

1

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும், சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும், சென்னை எழும்பூரில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சட்டப்பேரவையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதால், நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏ.-க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

 

இந்நிலையில், திமுக அரசை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தினார்.

 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை ஆளுநரை சந்திக்க இருப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். முன்னதாக அதிமுகவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.

 

அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்ததும், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது வன்மையான கண்டனத்துக்குரியது எனவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon