சர்ச்சையில் சிக்கிய தனுஷ்..!
நாகர்ஜுனா சில நாட்களுக்கு முன் ஏர்போர்ட் வந்த பொழுது அவர் அருகில் வந்த நபரை பாதுகாவலர் தள்ளிவிட்ட வீடியோ வைரலானது. நடிகர் தனுஷும் நாகார்ஜுனாவுக்கு பின்னால் நடந்து வந்த நிலையில் அவர் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.
இந்த விஷயம் பெரியது சர்ச்சையானதை தொடர்ந்து நாகார்ஜுனா மன்னிப்பு கோரி இருந்தார். இந்நிலையில் இதே சம்பவம் தனுஷுக்கும் நடந்துள்ளது. ஷூட்டிங்கிற்காக வந்தபொழுது ரசிகர்கள் சிலர் ஃபோனில் அவரை போட்டோ எடுக்க முற்பட்டிருக்கின்றனர்.
அவர்களை தனுஷின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தனுசை விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





