பிரதமரின் தமிழகப் பயணம் ஒத்திவைப்பு..!
ஜூன் 20ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை-நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கவும், சிலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அவரது பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




