மதுரை வாழைத்தோப்பைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சாயல்குடியில் இருந்து மதுரைக்கு திரும்பும் பொழுது அவர் ஓடிஜி சாலையில் தாறுமாறாக ஓடி மோதியதில் மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே டீக்கடையில் நின்றிருந்த காளிமுத்து, விஜயராமன், பெருமாள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
ஜீப்பை விட்டு விட்டு கண்ணன் தப்பி ஓடினார். விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கண்ணனை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.