திடீரென காணாமல் போன 5 மாத குழந்தை 3 மணி நேரத்தில் மீட்பு..!

ஞ்சையின் காணாமல் போன 5 மாத குழந்தை 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த தம்பதி தஞ்சை மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் 5 மாத குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.

 

பிறர் எழுந்து பார்த்தபொழுது குழந்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காணாமல் போன குழந்தையை விசாரணை நடத்தினர்.

 

அப்பொழுது ரயில் நிலையத்தில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புதரில் குழந்தை கிடப்பது கண்டறியப்பட்டது. பின்னர் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.