--- --:--:-- --

ஆன்லைனில் விற்பனைக்கு வரும் கார்களை ஓட்டி பார்ப்பதாக கூறி செய்த செயல்..!

4

கேரளாவில் ஓஎல்எக்ஸ் ஆப்பில் விற்பனைக்கு வந்த காரை ஓட்டி பார்க்க வேண்டும் எனக்கூறி கன்னியாகுமரிக்கு வரவழைத்து அவர்களை கடத்தி செல்வதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

 

இது போன்று அடிக்கடி நடப்பதாக வந்த புகாரையடுத்து போலீசாரே காரை விற்பனை செய்வதாக அந்த ஆப்பில் பதிவிட்டதாக தெரிகிறது. திருவட்டாரை சேர்ந்த இருவர் அந்த காரை தாங்கள் வாங்குவதாகவும் அழகிய மண்டபம் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

 

வழக்கம்போல விலை பேசிவிட்டு ஓட்டி பார்ப்பதாக கூறி காரை கடத்தி செல்ல தயாரான இரண்டு பேரையும் போலீசார் வளைத்து பிடித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon