--- --:--:-- --

ஸ்ரீமதி தாயார் பரபரப்பு புகார்.. சிசிடிவியில் உள்ள காட்சிகள் அழிப்பு..!

10

னியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கு ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக தாயார் செல்வி நீதிமன்றத்தில் ஆவணங்களை கேட்டு முறையிட்ட வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் சிசிடிவி காட்சி பதிவுகள் கொண்ட 26 சிசிடிவிகள் செயல்படவில்லை என்று தாயார் குற்றம் சாட்டிய நிலையில் 26 சிசிடிவிகள் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என்று அரசு தரப்புக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

மாணவி ஸ்ரீமதி தாய் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் செய்திகளில் பதிவான காட்சிகள் ஏன் வரவில்லை என்றும் செய்திகளில் பதிவான காட்சிகளை அழிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை தொழில்நுட்ப சான்றுகளுடன் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon