இரவு நேரத்தில் பைக்குகளை பஞ்சராக்கிய மது போதை நபர்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபோதையில் இரவு நேரத்தில் பைக்குகளை ஒருவர் பஞ்சர் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அருள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் மனைவியை பிரிந்து வசித்து வரும் செந்தில் குமார் குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
காலையில் வாகனங்களை எடுத்த பொழுது குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட செந்தில்குமார் சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய நிலையில் அவரை போலீசார் எச்சரித்து விட்டு சென்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





