பிரபல நடிகையுடன் சென்னையில் உள்ள கோவிலுக்கு சென்ற நடிகை ஜான்வி கபூர்..!

ரு நடிகையாக இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை எப்பொழுதுமே பிடித்து வைத்திருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முக்கிய நாயகியாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக Mr. & Mrs. Mahi எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது.இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் பைனல் போட்டியில் படத்தின் கதாநாயகன் ராஜ்குமார் ராவ் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் கலந்துகொண்டனர்.

 

இவர்கள் இருவரும் ஷாருக்கானின் கொல்கத்தா அணியை சப்போர்ட் செய்து வந்தனர். ஆட்டத்தில் இறுதியில் ஐபிஎல் 2024ஆம் ஆண்டு கோப்பையை கொல்கத்தா அணி வென்றதை. அதன் கொண்டாட்டங்களை நாம் பார்த்தோம்.

 

இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையில் உள்ள பிரபல முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஜான்வி கபூர் உடன் பிரபல நடிகை மஹேஸ்வரியும் சென்றுள்ளார். நடிகை மஹேஸ்வரி நடிகை ஜான்வி கபூரின் உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.