தவெக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளுக்கு விடுத்த அதிரடி உத்தரவு..!

சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் தமிழக வெற்றிக கழகம் என்ற கட்சியை தொடங்கி அந்த கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

 

மேலும், தற்போது அவர் நடித்து வரும் கோட் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 படம் தான் சினிமாவில் தான் நடிக்கவிருக்கும் கடைசி படம் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார். அரசியலில் முழு நேர மக்கள் பணியில் ஈடுபட போவதாகவும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் விஜய்.

 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், மே 28 ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அனைவருக்கும் உணவு கிடைத்திடவேண்டும் என்பதை வலியுறுத்தி 28-05-2024 அன்று அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட, அணி, கிளை, நகரம், ஒன்றியம், மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட யாவரும் செய்யவேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், உரிய தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கட்சியின் தலைவர் சார்பில், கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.