குஜராத் மாலின் கேமிங் சென்டரில் பயங்கர தீ விபத்து..!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் கேமிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 சிறார்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா மாவா சாலையில் சிறுவர்களுக்கான விளையாட்டு மையம் அமைந்துள்ளது.

 

அதில், நேற்று வார விடுமுறையை ஒட்டி குழந்தைகள், சிறுவர்கள் என ஏராளமானோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு தற்காலிக கட்டடம் சரிந்து விழுந்தது.

 

தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், 9 குழந்தைகள் உட்பட 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

 

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை குஜராத் மாநில அரசு அமைத்துள்ளது.