பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
பள்ளிகள் திறக்கும் நாளான ஜூன் 6ஆம் தேதி செய்ய வேண்டியவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது. அதன்படி, ஜூன் 6ஆம் தேதி ‘மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்’ நடத்தப்படவுள்ளது.
கல்வி இணை செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும், பள்ளி வளாகம் தூய்மையாக இருக்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




