--- --:--:-- --

பொக்லைன் இயந்திரத்தை விற்ற நபர்..!

3

திண்டுக்கல் மாவட்டம் கணேஷ் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் அவர் கட்டுமான பணிகள் காரணமாக கனரக வாகனங்களை வாடகைக்கு இயக்கியுள்ளார் ராமகிருஷ்ணன்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமக்கால் பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால் ஓராண்டாகியும் வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 

வினோத்குமாரிடம் வாடகை கேட்க ராமகிருஷ்ணன் அந்த குவாரிக்கு சென்றுள்ளார். அங்கு பொக்லின் இயந்திரத்தில் பல பாகங்கள் இல்லாமல் இருந்துள்ளது. இது குறித்து வினோத்குமாரிடம் கேட்ட பொழுது பொக்லைன் இயந்திரம் திருடு போய்விட்டதாக அலட்சியமாக கூறியுள்ளார்.

 

பதறிப்போன ராமகிருஷ்ணன் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் வினோத்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொக்லைன் இயந்திரத்தின் பாகங்களை ஒவ்வொன்றாக கழற்றி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon