பாஜக தோல்வி உறுதியாகிவிட்டது : அகிலேஷ் யாதவ்
4ம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் பாஜகவின் வீழ்ச்சி உறுதியாகிவிட்டது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சமாஜ்வாதி கட்சி தலைவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
ஜான்சி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ் விவசாயிகளை கட்டி காப்போம் என்று உறுதி அளித்ததை பாஜக அரசாங்க நிறைவேற்ற முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். 4 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





