--- --:--:-- --

டிவி ரீசார்ஜ் நம்பரை தவறாக கூறிய 3வது மனைவி.. கொலை செய்த கணவன்..!

4

கோவை அருகே சூலூர் நகரில் டிவி ரீசார்ஜ் நம்பரை தவறாக கூறிய மூன்றாவது மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். சூலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்ற கூலி தொழிலாளி உமா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

அவர்கள் வீட்டில் உள்ள டிவியில் படம் தெரியாததால் ரீசார்ஜ் செய்யும்படி கூறி அதற்கான நம்பரை உமா கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் தவறாக இருந்ததால் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை.

 

அதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் மது போதையில் வீட்டிற்கு சென்று மனைவியை சரமாரியாக தாக்கிய நிலையில் உமா உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்க போலீசார் தர்மராஜை கைது செய்து நீதிமன்றத்தில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon