--- --:--:-- --

உல்லாசத்திற்கு அழைத்த 2 பெண்கள்.. ஆசையாக சென்ற நபர்.. அதன் படி நடந்தது என்ன..?

10

பழனியில் உல்லாசத்திற்கு அழைத்து பணம் செல்போனை பறித்ததாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் ரமேஷ் என்பவர் அளித்திருந்த புகாரில் இரண்டு பெண்கள் தன்னை தங்கும் விடுதிக்கு உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் அங்கு மூன்று ஆண்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்து கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் ரோந்து பணியின் பொழுது சண்முகநதி அருகே சந்தேகத்திற்கு இடமாக இரண்டு கார்களில் வந்த ஐந்து பேரைப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்பொழுது இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் அடங்கிய அந்த கும்பல் ரமேஷிடம் பணம் பறித்ததும் கொடைக்கானலில் இருந்து கார்களை திருடி வந்ததும் தெரிய வந்தது.

 

ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த இரண்டு திருட்டு கார்கள், கத்தி, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon