--- --:--:-- --

உண்மையை உளறிய நண்பனை கொலை செய்த நண்பர்கள்..!

5

சென்னை கோயம்பேட்டில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஆதம் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் அவருடைய நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கடந்த ஆண்டு திருட்டு வழக்கில் கைதான அவர் விசாரணையின் பொழுது தனது நண்பர்கள் வெளி மாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்வது குறித்து போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

இதன் பெயரில் கைதான அவரது நண்பர்கள் ஜாமினில் வெளியே வந்து ஆதமை தனியே அழைத்து சென்று கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon