நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு..!
ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் வேட்பாளர் ரவிச்சந்திரா ரெட்டிக்கு ஆதரவாக அவர் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, விமான நிலையத்தில் இருந்து ரவிச்சந்திரா வீடு வரை பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், அனுமதியின்றி பேரணி சென்றதாக அல்லு அர்ஜூன் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




