--- --:--:-- --

மூன்று குழந்தைகளை தூக்கி வீசிய கொன்ற கொடூர தந்தை..!

10

உத்திரபிரதேச மாநிலத்தில் ஒருவர் தாய், மனைவி குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மனநலம் பாதிக்கப்பட்ட 42 வயதான அனுராக் சிங்கை அவரது குடும்பத்தினர் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க முடிவு செய்ததை தொடர்ந்து அனுராக் தொடர்ந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்து சம்பவத்தின் பொழுது வாக்குவாதம் ஏற்பட்டு தாய் சாவித்திரியை சுட்டுக்கொன்ற அனுராக்சிங் பின்னர் தனது மனைவி பிரியங்காவை கத்தியால் தாக்கி கொலை செய்தார்.

 

மேலும் தனது 12, 9 மற்றும் 6 வயது நிரம்பிய மூன்று குழந்தைகளையும் வீட்டின் மேற்கூறையில் இருந்து தூக்கி வீசிக் கொன்று உள்ளார். தொடர்ந்து அனுராக்சிங் தன்னை தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்.

 

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon