தமிழகத்தில் நுழைய முயன்ற ஆம்புலன்ஸ்.. ஓசூர் எல்லையில் திருப்பி அனுப்பி வைப்பு..!
கர்நாடகா வழியாக குதிரைகளுடன் தமிழகத்திற்குள் நுழைய முயன்ற ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலைத் தொடர்ந்து தமிழக எல்லைகளில் கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த கால்நடைகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் தமிழகத்திற்குள் நுழைய முயன்ற கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அதில் ஐந்து குதிரைகள் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாகனத்தை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





