நீட் தேர்வில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதாக மாணவர்கள் குற்றச்சாட்டு..!
தூத்துக்குடியில் உள்ள அழகர் பள்ளியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் மற்றும் மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதால் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் 768 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதினார். இதில் பலருக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதை விட மாறுபட்டுள்ளதாக மாணவ மாணவியர் கூறுகின்றனர்.
தேர்வு மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள்களுக்கு கியூஆர்எஸ்டி என கோடு வழங்கப்பட்டிருந்ததாகவும் இந்த மாதத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள்களுக்கு எம்எம்ஓபி என்ற கோடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய மாணவ மாணவியர் விடைகளை சரிபார்த்த பொழுது வினாத்தாள்கள் மாறி இருந்தது தெரிய வந்தது. தாங்கள் எழுதிய வினாத்தாளுக்கு உரிய மதிப்பெண் வழங்கி ரேங்க் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தனியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





