கிரிக்கெட் விளையாட்டில் பிரச்சனை..ஸ்டெம்பால் தாக்கியதில் சிறுவன்.. இளைஞர் உயிரிழப்பு..!
திருவாரூரில் கிரிக்கெட் விளையாடும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் சிறுவன் செம்பால் தாக்கியதில் இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்தான். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்.
12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கொத்தனார் வேலை செய்துவரும் அவர் தினந்தோறும் நண்பர்கள் உடன் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் நேற்றும் விளையாட சென்றுள்ளார்.
அப்பொழுது முத்தமிழன் என்ற சிறுவன் வீசிய பந்தால் அஜித்குமார் ஆட்டம் இழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் சிறுவனை தாக்கியுள்ளான். இது குறித்து சிறுவன் தனது சகோதரர் பிரபாகரிடம் கூறியதால் அவர் அஜித் குமாரை தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் பிரபாகரன் அங்கிருந்து செம்பால் அஜித்குமாரின் தலையில் வேகமாக தாக்கியுள்ளான். ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 15 வயது சிறுவன் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





