காதலிக்கு 18 வயது முடிந்த மறுநாளே காதல் திருமணம் செய்த ஜோடி..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஆலங்குடியார் வீதி பகுதியில் சேர்ந்தவர் சித்ரா. இவர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார். சித்ரா தனது அக்கா வீட்டு அருகே வசிக்கும் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.
கொத்தனார் வேலை பார்க்கும் அந்த இளைஞரை திருமணம் செய்வதில் சித்ரா உறுதியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுடன் அவருக்கு 18 வயது முடிவடைந்தது. இதையடுத்து இன்று இருவரும் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் காதலர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். போலீசார் பெற்றோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





