பாஜக சொல்வதை தேர்தல் ஆணையம் செய்கிறது – மம்தா பானர்ஜி
தேர்தல் ஆணையம், பாஜக அரசின் கட்டளை படி செயல்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை காபந்து அரசாக இருந்தாலும், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அமைப்புக்களும் அவர்களின் விருப்பப்படி நடப்பதாக கூறிய அவர், இந்த தேர்தல் முடிவில் நாட்டில் இருந்து பாஜக துடைத்தெறியப்படும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




