திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
சித்ரா பௌர்ணமியையொட்டி ஏப்ரல் 22, 23-இல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
அவர்களது வசதிக்காக திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு பண்ணலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




