--- --:--:-- --

வாக்கு பதிவு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் : மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்

5

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் மற்றும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

 

100% வாக்குப்பதிவு குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடவளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் புதிர் போட்டி நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் சென்னையில் மட்டும் ஒன்பது கோடி ரூபாய் மற்றும் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புக்கான பொருட்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் வருமானவரித்துறையினரால் 23 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் சென்னையில் காவல்துறை தபால் வாக்கு செலுத்த நாளை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் நாளை மறுநாளும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon