ஒரே இடத்தில் நடந்த இரண்டு விபத்து..!
மதுரை மாவட்டம் ஒத்த கடை பகுதியில் மேலூர் மெயின் ரோடு பகுதியானது எப்பொழுதும் வாகன ஓட்டிகள் அதிகம் பயணிக்கும் கூட்ட நெரிசலில் அதிகமாக காணப்படும் பகுதியாக இருக்கிறது.
இந்த சாலையில் ஜம்ஜம் ஸ்வீட் கடை எதிரே இருபுறமும் சாலையை கடந்து செல்லும் வகையில் இடைவெளி ஒன்று இருக்கிறது. இதில் வலது பக்கம் இருந்து இடது பக்கம், இடது பக்கம் இருந்து வலது பக்கம் என நான்கு பக்கங்களில் இருந்தும் வாகன ஓட்டிகள் கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் வேகத்தடை எதுவும் இல்லாததாலும் சாலையில் டிவைடர் இடைவெளி பகுதியில் கார் அல்லது பைக் நிற்பதற்கு போதுமான இடம் இல்லாததாலும் விபத்துக்கள் தொடர்கதையாகி வருகின்றன. குறிப்பாக கடந்த 11ஆம் தேதி அன்று தனது மகளுடன் தந்தை ஒருவர் சாலையை கடக்க முயன்ற பொழுது சாலையில் நேராக வந்தவர் மோதியதில் மூவரும் காயமடைந்தனர்.
அதேபோல் இன்றைய தினம் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது மிதமான வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். அடுத்தடுத்த நாட்களில் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





