ஏப்ரல் 21 இல் மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்..!

துரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை கட்டணம் முன்பதிவு செய்து நேரில் தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி கோவிலின் வடகால வீதி திருக்கல்யாண மண்டபத்தில் காலை நடைபெறுகிறது.

 

நேரில் காண விரும்புவோர் 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் காண கட்டண சீட்டுகளைப் பெற்று தரிசிக்கலாம். இணையதளம் மற்றும் கோயிலின் இணையதளம் ஆகியவற்றில் ஏப்ரல் 9 முதல் 12-ம் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செல்லலாம்.

 

500 ரூபாய் கட்டண சீட்டு பதிவை ஒருவர் இரண்டு கட்டண சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். 200 ரூபாய் கட்டண சீட்டு பதிவில் ஒருவர் மூன்று கட்டண சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது.