--- --:--:-- --

திமுக கூட்டணிக்கு ஆதரவாக நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்கும் கமல்..!

9

தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சந்தித்தனர்.

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையக் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து நாளை முதல் ஈரோட்டில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon