கோடை விடுமுறையிலும் பள்ளிகளில் மதிய உணவு..!
கோடை விடுமுறை காலத்திலும் வறட்சி பாதித்த 223 தாலுகாக்களிலும் பள்ளிகளில் மதிய உணவு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் 47 ஆயிரம் அரசு பள்ளிகள் மற்றும் 6,485 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் 55 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இதில் 40% குழந்தைகள் மதிய உணவு திட்டத்தால் பயனடைகின்றனர். இந்தநிலையில் கோடை விடுமுறை காலத்திலும் வளர்ச்சி பாதிப்புகள் இருக்கும். 223 தாலுகாக்களிலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





