--- --:--:-- --

நடிகர் கிஷன் தாஸுக்கு திருமணம்.. வருங்கால மனைவி யார் தெரியுமா..?

11

முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கிஷன் தாஸ். தர்புகா சிவா இயக்கிய இப்படம் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது.ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

இதை தொடர்ந்து Sync எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

 

Youtube-ல் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக இருக்கும் கிஷன் தாஸுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தனது தோழியை காதலித்து கரம்பிடிக்க போகிறாராம்.

 

மேலும் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகர் கிஷன் தாஸ் தனது சமுக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். ரசிகர்களும், திரை பிரபலங்களும் நடிகர் கிஷன் தாஸுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon