--- --:--:-- --

ஓபிஎஸ் மேல அவ்ளோ பயமா? டஃப் கொடுக்கும் 5 ஓபிஎஸ்கள்..!

12

கைவிட்டு போன கட்சி… சின்னாபின்னமான சின்னம்… கேஸ்கள் எல்லாம் புஸ்ஸ்… என அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்து போயிருக்கும் கவலையில் இருந்த ஓபிஎஸ்-க்கு பாஜக மட்டும் தான் ஒரே நம்பிக்கையாக இருந்தது. ஆனால், தேர்தல் கூட்டணியில் அவர்களும் ஒரு சீட்டை கொடுத்து ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்தனர்.

 

முன்னாள் முதல்வர் ஒருவரின் இன்றைய அரசியல் நிலை பரிதாபமாக இருக்கும் சூழலில், பட்ட காலிலேயே படும் என்பதை போல், சுயேச்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு இன்னொரு ஷாக். ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேரை தேடிப்பிடித்து வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர் அவரது அரசியல் எதிரிகள்.

 

ஓபிஎஸ் மனுதாக்கல் செய்த அன்றைய தினமே மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின்னர், வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என்பவரும், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

 

அதெல்லாம் சரி… அந்தளவுக்கு தேர்தலில் எதிரணிக்கு ஓபிஎஸ் டஃப் கொடுக்கக் கூடியவரா? எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் மேல் அவ்வளவு பயமா என்றெல்லாம் உள்ளூர் அரசியல்வாதிகள் நமுட்டுச் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon