--- --:--:-- --

திடீர் மாரடைப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லொள்ளு சபா நிகழ்ச்சி பிரபலம்

2

விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சி ஹிட், அதில் ஒன்று தான் லொள்ளு சபா. இந்த காமெடி நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதில் நடித்தவர்களும் சினிமாவில் பெரிய அளவில் கலக்கினார்கள். அப்படி இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் சேஷு.

 

இவர் 2002ம் ஆண்டு தனுஷ் நாயகனாக நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சிறப்பாக நடித்து, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற சேஷு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அவர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று மக்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon