அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நீதிமன்றம் போட்ட தீர்ப்பு..!
செந்தில் பாலாஜியின் பிணை மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்க துறையால் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தகவல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் விசாரித்து வந்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் வாதங்களும் கடந்த 21 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





