கர்ப்பிணிக்கு வேலைக்கு அனுமதி மற்றும் பரபரப்பு தீர்ப்பு..!
கர்ப்பிணி ஆக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மருத்துவமனையில் பணியாற்ற வேலை கிடைத்துள்ளது.
ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதால் தற்காலிகமாக பணிக்கு தகுதியில்லை என கூறி மருத்துவமனை நிர்வாகம் வேலைத் தர மறுத்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் தாய்மை என்பது ஒரு வரம். கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறக்கப்படுவது அரசியலமைப்புக்கும் பெண்ணுக்கும் எதிரானது எனவும் 24 மணி நேரத்தில் மனுதாரரை பணியமர்த்த உத்தரவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





