ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்..!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே நியாய விலை கடையை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக வனப்பகுதியில் ஐந்து காட்டு யானைகள் சுற்றி வந்தன. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகள் நுழைந்த காட்டு யானைகள் அந்த பகுதியில் உள்ள நியாய விலைக் கடையை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, மளிகை பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தியது.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அந்த பகுதியில் இருந்து விரட்டினர். யானைகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





