--- --:--:-- --

சிதம்பரம் கோயில் வரவு, செலவுகளை தாக்கல் செய்ய உத்தரவு..!

2

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் மற்றும் தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் வரவு செலவு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நிபுணர் குழுவின் ஒப்புதல் இன்றி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கட்டுமானங்கள் மேற்கொள்வரை தடுக்கவும் வரும் செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவும் பொது தீட்சிதர் குழுவுக்கு உத்தரவிட கோரி இந்து சமய அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவ் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கட்டுமானம் மேற்கொள்ள மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மீறி தீட்சிதர்கள் செயல்படுவதாக கூறி அதற்கான ஆவணங்கள் தாகம் செய்யப்பட்டது.

 

சட்டவிரோதமாக கட்டுமானம் நடத்தவில்லை என்றும் தனிப்பட்ட கணக்கு தணிக்கையாளர்களை கொண்டு வரவு செலவு காணிக்கை செய்யப்படுகிறது எனவும் பொது தீட்சிதர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

 

இது தொடர்பாக வாதங்களை கேட்ட நீதிபதிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அந்த அறக்கட்டளை ஆகியவற்றில் கடந்த மூன்று ஆண்டு வரவு செலவு விவரங்கள் வருமானவரி தாக்கல் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon