ஸ்டாலின் போட்ட பதிவு.. தமிழகத்தில் பரபரப்பு..!
2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி நோக்கி நாம் பயணத்தில் அடுத்த 100 நாட்களும் மிக முக்கியமானது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் நாற்பதும் நமதே நாடும் நமதே என்பதை உறுதி செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பொதுக்கூட்டங்கள் மிக எழுச்சியுடன் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிகரமாக இந்த கூட்டங்களை ஒருங்கிணைந்த அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி நோக்கி நாம் பயணத்தில் அடுத்த 100 நாட்களும் மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். கடமை உணர்வோடு ஓய்வின்றி உழைத்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





