கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காரைக்கால் மாவட்ட மாணவர்கள் போராட்டம்..!
புதுச்சேரி அரசுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினி இதுவரை காரைக்கால் மாவட்டத்திற்கு வழங்காத அரசை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு அலுவலகப் பள்ளி கல்வித்துறை சார்பில் பதினோராம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது.
இதனை கண்டித்து இன்று காரைக்கால் மாவட்ட மாணவர் கூட்டமைப்பு சார்பில் அங்குள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் புதுச்சேரி பள்ளி கல்வித்துறையினை கண்டித்து கண்டன.
முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பள்ளி கல்வித்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தி, நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





