வேகமாக பைக் ஓட்டியதால் நடந்த தகராறால் விபரீதம்..!
புதுச்சேரியில் சிறுவனைத் தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு இளைஞர் பைக் வேகமாக ஓட்டியுள்ளார். இதனை அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டி கேட்டுள்ளனர்.
ஏன் வேகமாக ஓடுகிறாய் என திட்டியதால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் தனது கூட்டாளிகளை அழைத்து வந்து அந்த பகுதி இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார். அவருடன் இருந்த மதிவாணன் என்பவரை பிடித்து தாக்கியுள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





