--- --:--:-- --

கயிறு, பெட்ரோல் கேனுடன் தரையில் படுத்து போராடிய கவுன்சிலர்..!

10

ஸ்பெண்ட் காலம் முடிந்து ஆற்காடு நகராட்சிக்கு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் பெட்ரோல் கேன் மற்றும் கயிறுடன் தரையில் படுத்து போராட்டத்தை ஈடுபட்டார்.

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 28 வது வார்டு உறுப்பினராக உள்ள உதயகுமார் நகர்மன்ற தலைவரை கை நீட்டி பேசியதற்காகவும் நீர்த்தேக்க தொட்டியை உரிய அனுமதி இல்லாமல் சுத்தம் செய்ததற்காகவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

எனவே சஸ்பெண்ட் காலம் முடிந்து நகராட்சி நடைபெற்ற அவசர கூட்டத்திற்கு அழைக்காததால் ஆத்திரமடைந்த உதயகுமார் நகராட்சி ஆணையர் முன் பெட்ரோல் கேன் மற்றும் கயிறை கையில் வைத்துக்கொண்டு படுது போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon